Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை…. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 34, 548 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று சவரன் 256 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 748 விற்பனையாகி வருகிறது . ஒரு கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் குறைந்து 4,331 க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து 72.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு கிலோ வெள்ளி 72 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |