தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் கமல் தீவிர பிரச்சாரசத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி உருவாக்குவதிலும் முனைப்பு கட்டி வருகிறார். சமத்துவம் மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மநீம கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கமலுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அமமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்க தயாராக இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி உருவானால் யாருக்கு சாதகமாக இருக்கும்? யாருக்கு பாதகமாக இருக்கும் என்று மக்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.