Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் விவசாயம் செய்ய சென்றுவிடுவார்… ஜனநாயக படுகொலை செய்கிறார்கள்… காங்கிரஸ் பொது செயலாளரின் விமர்சனம்…!!!

காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய்தத்  செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. அரசை விமர்சித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறும் போது, தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது பல இடங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார் என அவர் கூறியுள்ளார்

இதனையடுத்து பாண்டிச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமியின் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலை செய்வதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அ.தி.மு.க. அரசை பற்றி கூறும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு இடும் கட்டளைகளை செயல்படுத்தும் அரசாக உள்ளது எனவும், தன்னை விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதல்வர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தோல்வி பெற்று  விவசாயம் செய்ய சென்று விடுவார் எனவும் விமர்ச்சித்துள்ளார்.

Categories

Tech |