மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனை சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவருடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூட்டணி பற்றி கமலஹாசனிடம் பேசினோம். ஒத்த கருத்துடையவர்கள் கூட்டணியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன்.
அதிமுக தன்னை அழைத்து பேசும் என்று நினைத்தேன் ஆனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்.கமல், சீமான் என யாருவேண்டுமானால் வரலாம். விட்டுக் கொடுத்தால் தான் மேலும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைவார்கள் என்று அவர் கூறினார். இந்த ஒரு முறை பணத்தை வாங்காமல் ஓட்டு போடுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.