தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இடியடுத்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தொண்டர்களின் வெற்றி. இன்னும் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் நிறைய இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.