இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்சேதுபதி திண்டுக்கல் சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இயக்குனர் மிஸ்கின் இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார் .
மேலும் இந்த படத்தை முருகானந்தம் தயாரித்து வருகிறார் . தற்போது திண்டுக்கல்லில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . இந்நிலையில் பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் விஜய்சேதுபதி தற்போது இதன் படப்பிடிப்புக்காக திண்டுக்கல் சென்றுள்ளார்.