பிரிட்டனில் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா என்ற வைரஸ் பரவத் தொடங்கியபோது பிரிட்டனில் தான் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் தனக்கு 10 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் மருத்துவமனையை வெடிக்கச் செய்து விடுவேன் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டியிருக்கிறார்.
கொரோனவிலிருந்து மக்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த அந்த மருத்துவமனை ஊழியர்கள் மர்ம நபரின் மிரட்டலுக்கு பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தொடர்ந்து 17 மின்னஞ்சல்களை மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவர்களை அச்சுறுத்தியுள்ளார். யாராலும் தன்னை கண்டு பிடிக்க முடியாது என்று எண்ணி புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டனர்.
ஜெர்மனியை சேர்ந்த Emil A என்பவர் தான் அந்த மின்னஞ்சல்களை மருத்துவமனைக்கு தொடர்ந்து அனுப்பியுள்ளார். கணினி அறிவியல் கற்ற Emil பெர்னிலிலிருந்து நாஸி அமைப்பின் மிரட்டல் மின்னஞ்சல்களை மருத்துவமனைக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதனையறிந்த காவல்துறையினர் ஒரே நாளில் அவரை கைது செய்தனர். Emil Aக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெர்மனியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.