தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
அரசியல் கட்சிகள் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள அர்ஜுன மூர்த்தி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இமமுக ஆட்சிக்கு வந்தால் நான்கு துணை முதல்வர் இருப்பார்கள் எனவும் அறிவித்துள்ளார்.