தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் 7 வது கட்சியாக மக்கள் நீதி மையம் கட்சியில் பழ கருப்பையா இணைந்துள்ளார். தேசிய காங்கிரஸ், ஜனதாதளம், திமுக, அதிமுக, மதிமுக என ஆறு கட்சிகளில் இருந்த இவர் தற்போது ஏழாவது கட்சியாக மக்கள் நீதி மையத்தில் இணைந்துள்ளார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில மாதங்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் கடைசியாக கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.