நாகராஜா கோவிலில் நடைபெற்ற ஆயில்ய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகமூட்டம் நாகராஜா கோவிலில் நேற்று ஆயில்ய விழா நடைபெற்றது. இதில் 1008 பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் பொங்கலிட்டனர். பின் அந்த பொங்கலை நாகராஜாவிற்கு படைத்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல்வேறு தீப ஆராதனைகளுடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்குள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நாகராஜா கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் இருந்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு தரிசனம் பெற்ற பக்தர்கள் மன திருப்தியுடன் வீடு திரும்பினர்.