கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ரோஜெனேகாவின் தடுப்பூசிக்கு கனடா சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பைசர்- பயோஎன்டெக் மற்றும் மாடர்னா என்ற இரண்டு நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளுக்கு கனடாவின் சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான சோதனை தரவுகளின் அடிப்படையில் அஸ்ட்ரோஜெனேகாவின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கனடாவின் சுகாதாரத்துறை தாமதமாக்கி வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியான ஆய்வின் முடிவில் நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அஸ்ட்ரோஜெனேகாவின் தடுப்பூசி பாதுகாப்பதுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரோஜெனேகா சேர்ந்து உருவாக்கிய covid-19 தடுப்பூசியை நாட்டின் மூன்றாவது அவசரக்கால தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என்று கனடா சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் செய்ல்படுத்தப்படும் தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரிக்கலாம் என்று கனடா எண்ணி உள்ளது . மேலும் அஸ்ட்ரோஜெனேகாவின் தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 62.1% செயல்திறன் கொண்டது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று அஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ரோஜெனேகா நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கனடா அரசாங்கம் ஆர்டர் செய்துள்ளது.