தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் ரஜினி கட்சி துவங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் அர்ஜுனன் மூர்த்தி ரஜினி கட்சி ஆரம்பித்தால் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் இந்த கட்சிக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வெறும் வாழ்த்து மட்டும் தானா? அல்லது இந்த வாழ்த்தையே ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.