முன்னாள் அமைச்சர் ஒருவர் பேட்டியின் போது சட்டத்திற்கு முரணாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்தவர் மோரிட்ஸ் லுயன்பெர்கர். இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஒரு பிணைக்கைதி விடுவிக்கப் படுகிறார் என்றால் அதற்காக ஒரு பிணைத் தொகை கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சுவிட்சர்லாந்தின் சட்டத்தின்படி பிணைக் கைதிகளை மீட்க பிணைத்தொகை கொடுக்கப்படவில்லை என்று இருக்கிறது.
ஆகையால் மோரிட்ஸ் லுயன்பெர்கர் அளித்த பேட்டியில் அவர் கூறியது சட்டத்திற்கு முரணாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நீதி துறையிடம் ஆலோசனை கேட்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.