ஒன்பது, பத்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டுத்தேர்வு இன்றியும், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றியும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஆணையை தற்போது வெளியிட்டார். மேலும் மதிப்பெண் சம்மந்தமான நெறிமுறைகள் விரைவில் அரசு வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.