Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் தேர்தல், அப்புறம் தான் படம்”… இரண்டு மாதத்துக்கு கால்சீட் கிடையாது… கமல்ஹாசன் அதிரடி..!!

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என அனைத்துத் துறையிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். அடுத்த சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் முடிந்தும் கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் களைத்துப்போய் ஓய்வெடுப்பார்.

அதனால் அவர் ஏப்ரல் மாதமும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரியவருகிறது. மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே இந்தியன் 2 விக்ரம் போன்ற படங்களில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்தியன் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து  இயக்குனர் சங்கர் தெலுங்கு படத்தின் முன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இரண்டு படங்களுக்கும் அவர் கால்ஷீட் கொடுப்பார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |