Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

மகாராஷ்டிராவை அடுத்துள்ள மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவை அடுத்த மத்திய பிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா கடுமையாக அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்புக்காக அந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |