Categories
மாநில செய்திகள்

போராட்டம் வாபஸ்… நாளை முதல் பேருந்துகள் அனைத்தும் ஓடும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். இதனை அடுத்து தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Categories

Tech |