Categories
மாநில செய்திகள்

ரயில் சீட்டுக்கு அடியில் ஒரு பை… பதுங்கி பதுங்கி வந்த பெண்… அதிர்ந்துபோன போலீசார்…!!!

சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் வெடி பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் வெடிபொருள்கள் கொண்டு செல்வதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்து சென்றதை போலீசார் அறிந்தனர்.பிறகு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையம் வந்தடைந்தவுடன் போலீசார் ரயில் பெட்டியில் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது ரயிலில் உள்ள d1 பெட்டியில் 117 ஜெலட்டின் குச்சிகள் 350  டெட்டனேட்டரஷ் வெடிபொருள்கள் போன்றவை ஒரு இருக்கையின் அடியிலுள்ள  பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ,இவை அனைத்தும்  காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. ரயிலில் கொண்டுவரப்பட்ட இந்த வெடிபொருட்களை பற்றி விசாரணை நடத்தியபோது இதனை கொண்டு சென்றது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமணி என்ற பெண் என்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.

அதற்கு அப்பெண் காட்பாடியிலிருந்து தலசேரிக்கு இதனை கொண்டு செல்வதாகவும் தலசேரியில் கிணறு தோன்றுவதற்காக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டஷை எடுத்துச் செல்வதாகவும் போலீசிடம் கூறினார். மேலும் இதனைக் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |