திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, இவர் சாலையோரத்தில் குடிசை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சென்றும் சிகிச்சை பலனின்றி குழந்தை ஹன்சிகா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் சந்தேகமடைந்து மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.