பிக்பாஸ் பிரபலம் ரைசா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ரைசா வில்சன் ‘வேலையில்லா பட்டதாரி 2’, வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இதன்பின் ரைசா நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார் .
Katal kanni feels 🧜🏼♀️ pic.twitter.com/oxNgLK7o3k
— Raiza (@raizawilson) February 27, 2021
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள தி சேஸ், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் நடிகை ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கடற்கரை மணலில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி ரைசா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .