Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களை ஒன்னும் பண்ண முடியாது… வசமாக சிக்கிய குற்றவாளிகள்… கைது செய்த காவல்துறையினர்…!!!

கோவில் உண்டியலை உடைத்து  கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கோவிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம், சாமியின் தாலிக்கொடி, வெள்ளி கிரீடம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர். அதன்பின்பு அந்த நபர்கள் கொள்ளையடித்த பணத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவர்களிடம் விவரத்தை கேட்க சென்ற போது இளைஞர்கள் தப்பிக்க முயன்றதால் ஊர் பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கயிற்றினால் கட்டிப் போட்டனர்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் ‘நாங்கள் யார் தெரியுமா’ எங்களை விடவில்லை என்றால் இந்த ஊரில் உள்ள யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் எனவும், காவல்துறையில் பிடித்து குடுத்தால் அவர்களால் எங்களை தூக்கில் போட முடியாது எனவும் பொதுமக்களை மிரட்டியுள்ளனர். இதையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் 3 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இவர்கள் மதுரை மாவட்டத்தில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |