சரவணம்பட்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி பக்கத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டையும், கடையையும் பூட்டிவிட்டு சேலத்துக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து அருண் குமாரின் தந்தை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, பீரோ உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் வீட்டில் திருட்டு நடந்துள்ளதை உணர்ந்த அவர் இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையில் புகார் செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.