Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12,500 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |