Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்க சார் எங்களுக்கு வேணும்” வேற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் பண்ணக்கூடாது…. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்…!!

தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்.

தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மாணவர்கள் மீது அதிக அக்கறையும், பொறுப்பும் கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். இதனால் மாணவர்கள் அந்த தலைமையாசிரியர் மீது அதிக அன்பு கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் இன்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யபட இருப்பதாக அறிந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று பள்ளிக்கூடம் முன்பு ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமையாசிரியர் ராஜேந்திரனுக்கு அதே பள்ளியில் மூன்று மாதம் கூடுதல் பொறுப்பு வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |