இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு இனி தபால்துறை தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், தமிழில் தேர்வு எழுதும் வசதியை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.