Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உஷார்! “டிக்டாக் மூலம் காதல் வலை” சிக்கிய குடும்ப பெண்கள்…. வெளியான பகீர் சம்பவம்…!!

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். இதையடுத்து கார்த்தியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் முகநூல் பக்கத்தில் பொய்யான பெயரில் இரண்டு கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

பின்னர் அதன் மூலம் கார்த்தி பற்றிய தகவல்களை சேகரித்து உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர். இருப்பினும் கார்த்தி குறித்த போதுமான ஆதாரங்கள் அவர்களிடம் இருந்தும் காவல்துறையினர் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் அவரை கைது செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் டிக்டாக் மூலமாக 15க்கும் மேற்பட்ட குடும்பப்பெண்கள், ஐடி ஊழியர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |