கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி தனிமையில் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறினர்.
இருந்தும் மைக்கேல் தனது காதலி அகதா மகேஷ்ர்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து அதே ஹோட்டலில் ஆகாதா மகேஷ் வேறு ஒரு அறையில் தங்கியுள்ளார். மைக்கேல் அன்றிரவு முககவசம் இன்றி அகதா மகேஷின் அறைக்கு சென்று அன்று இரவு முழுவதும் அவருடன் தங்கியுள்ளார். காலை எழுந்து அவரின் அறைக்கு செல்லும் போது சுகாதார ஊழியரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறியதாக நைகல் மற்றும் அகதா மகேஷின் மீது வழக்கு தொடரப்பட்டு தலைநகர் சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் ஆகியுள்ளது. இந்த மாதம் அகதா மகேஷ் மற்றும் நைகல் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது அவர்கள் இருவரும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்து அகதா மகேஷிற்கு ஒரு வாரமும் மைக்கேலுக்கு இரு வாரமும் சிறை தண்டனை விதித்து 1000 டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.