இடியுடன் மழை பொழிந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,சந்திராயன் 2 விண்கலமானது வருகின்ற திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணி அளவில் எந்த தடையுமின்றி விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறினார்.மேலும் வானிலை மாற்றம் ஏற்பட்டு இடியுடன் மழை பொழிந்தாலும், விண்கலம் விண்ணில் செலுத்துவதில் எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும், மழை , இடியால் பாதிப்பு ஏற்படாத வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.