திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு உள்ளே பதுக்கி கொண்டு பொருட்களை திருடிய இரண்டு பெண்களை காவலர்கள் கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர்.
அவர்களுடைய வித்தியாசமான நடையினை கண்டு சந்தேகம் அடைந்த கடையில் பணி புரியம் பெண் ஊழியர்கள் அவ்விருவரையம் மடக்கி பிடித்து வைத்து சோதனை செய்யும் பொழுது கடையில் உள்ள பொருட்களை திருடியது தெரிந்தது.அந்த கடையின் ஓனர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் நடத்திய விசாரணையின் முடிவில் ,கோமதி மற்றும் சுகந்தி என்ற இவர்கள் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது .பொருட்களை திருடுவதற்கென்றே, அந்த புடவையை தனித்துவமாக வடிவமைத்து , அதில் பை போன்ற வடிவமைப்பை ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தந்து .அதன் பின் அந்த இருவரையம் கைது செய்த காவலர்கள் , பதுக்கி வைத்திருந்த பொருட்களை மீட்டு கொடுத்தனர்.