மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகாக சென்னையில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவின்குமார் மற்றும் அவரது நண்பர் முகமது ஆதாம் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் இருசக்கர வாகனமானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளதது.
இதனையடுத்து அந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழ நிலையில், அவரது நண்பர் முகமது பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து, முகமது ஆதாமை சிகிச்சைக்காகவும், கவின்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.