ராஜஸ்தானில் திருடுவதற்கு 90 லட்சத்திற்கு கொள்ளையர்கள் வீடு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மருத்துவர் சோனி என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டிலிருந்து 400 கிலோவுக்கு மேல் வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், சோனியின் வீட்டின் அருகே ஒரு வீட்டை 90 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி அதிலிருந்து சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வெள்ளியை கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளது. இது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்தது. இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.