Categories
உலக செய்திகள்

ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு… மாயமான 70 பணியாளர்கள்… மீட்கப்பட்ட 5 சடலங்கள்…!!

நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்க சுரங்கத்தில் பணியில் இருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 70 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவினால் அங்குள்ள மவுண்டோங் மாவட்டத்தில் இருக்கும் புங்கரா கிராமத்தில் இயங்கி வந்த தங்க சுரங்கம் கடுமையாக சேதம் அடைந்துவிட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து விட்டனர். மேலும் பணியில் இருந்த 70 பேர் காணாமல் போய்விட்டனர்.

இதுகுறித்து மாகாண பேரிடர் மேலாண்மை முகமை தலைவர் டடு பமுசு கூறும்போது, தங்க சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் உடல்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், 70 பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி நிலத்தடியில் புதைந்து இருக்கலாம் என அச்சப்படுவதாகவும், காணாமல் போனவர்களின் விவரம் குறித்து அவரவர் குடும்பத்தில் இருந்து தகவல்களை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

Categories

Tech |