Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் என்ட்ரி… ஹீரோயினியாக களமிறங்கும் வனிதா விஜயகுமார்… வைரல் புகைப்படம்…!!!

 பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கியவர் வனிதா விஜயகுமார். மேலும் சன் டிவியில் சின்னத்திரை சந்திரலேகாவின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பின்பு குக்  வித் கோமாளி,கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் தனது பெயரில் யூட் டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அவர் தொடங்கி யூடியூப் சேனலுக்கு உதவிய பீட்டர் பாலை காதல் திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கிறார். தன் குழந்தைகள் மீது முழுமையான கவனம் செலுத்தி வந்த வனிதாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்பு அதிகம் அமைந்துள்ளது.

ஹீரோயினை மையப்படுத்தி ‘அனல் காற்று’ என்ற படம் ஆதாம் தாசன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது .அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது முத்தமிழ் வர்மா இயக்கும் “2k அழகானது ஒரு காதல்” இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமிட்டுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி நடிகை வனிதா விஜயகுமார் போன்றோர் பங்கேற்றனர்.

இதனைப்பற்றி வனிதா விஜயகுமார் கொரோனாவிற்கு பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. திரை உலகின் ஜாம்பவானான ஆர்.பி. சவுத்ரி இப்பாட விழாவில்  நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்ததும் என் அப்பா அம்மாவை பார்த்ததுபோல் உணர்கிறேன். வெள்ளித்திரையில் மட்டுமே சில படங்களில்  பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்று நடிப்பதாகவும் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது அதனால் இயக்குனர் கதை சொல்லும்போதே ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் கிராமத்து  காதல் சம்பந்தப்பட்ட, அதாவது ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவம் வரையிலான பயணம் பற்றிய  மிக அழகான கதை. இந்த கதையில் ஹரிநாடாருடன்  முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளேன். மேலும் ஹரிநாடார் எனது தூரத்து சொந்தகாரர் என்பது எனக்கு சமீப காலத்தில் தான் தெரியவந்தது என்றார்.

Categories

Tech |