Categories
மாநில செய்திகள்

Breaking: அதிமுக கூட்டணியில் இணையும் அடுத்த கட்சி…. பரபரப்பு..!!

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. இன்று அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தொகுதி ஒதுக்கீடு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ் பி வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் உடன்பாடு உறுதியாகிவிட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கின்றதா? என்று பலரும் விமர்சித்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது குறித்து விரைவில் உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுக்கு அதிமுகவில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று விவாதம் எழுந்துள்ளது.

Categories

Tech |