பெற்றோர்கள் பொம்மைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக டெல்லியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “நம் நாட்டின் பொம்மை தொழிலில் அதிக வலிமை மறைந்து இருக்கிறது. அந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது சுயசார்பு இந்தியா பிரசாரத்தில் மிகப்பெரிய ஒரு பகுதி. பொம்மைகளுடன் நமது உறவு, நாகரீகத்தை போல மிகப் பழமையானது.
நமது கோவில்கள் பொம்மை தயாரிக்கும் வளமையான கலாச்சாரத்துக்கு சான்றாக உள்ளது. இந்த கண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர். பெற்றோர்கள் பொம்மைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொம்மைகளை உற்பத்தியாளர்கள் தயாரிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.