Categories
தேசிய செய்திகள்

உன்ன விட்டு என்னால இருக்க முடியாது… காதலன் இறந்த துக்கத்தில்… காதல் எடுத்த விபரீத முடிவு…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா( 21) இருவரும் வசித்து வந்தார்கள் . அதன் பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் சென்று ஆவடியை அடுத்துள்ள கீழ் கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியில் சென்று விட்டார்கள். அதன் பின்னர் வீட்டில் சுஜாதா தனியாக இருந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுஜாதா சுஜாதாவின் உடல் தீயில் கருகி பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் அங்குள்ள மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் பெற்றோர் அங்குள்ள முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இ தனை அதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் இந்த தற்கொலையின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து சுஜாதாவின் சுஜாதாவின் பெற்றோர் தனது மகள் சித்தூரில் வசிக்கும் தனது உறவினர் மகனான சிலம்பரசன் என்பவரை சிறிது நாட்களாக காதலித்து வந்தார்.

ஆனால்  இவர்களின் காதலை சிலம்பரசனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் சிலம்பரசன் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.இதனால் மனமுடைந்த சிலம்பரசன் கடந்த 2ஆம் தேதிவீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த சுஜாதாவின் பெற்றோர் அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்துச் சென்று குடும்பத்துடன் அவர் பாட்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தனர். ஆனால் இங்கு வந்து பின்னரும் தனது காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்த சுஜாதா  யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை  ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |