திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்கென்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான மெக்கன்சி பகுதியில் நிலநடுக்கம் தென்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
அங்கு குடியிருந்த மக்கள் வீடுகள் கிடுகிடுவென குலுங்க தொடங்கியவுடன் வீட்டிலிந்து வெளியேறியுள்ளனர். பின் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்தத்தில் எற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இதுவரை எந்த வித சேதமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.