Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த துக்கம்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சுஜாதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் சுஜாதாவை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் சுஜாதா உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் சுஜாதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர். மேலும் இச்சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |