மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மக்களை போலீசார் கொடூரமாக தாக்கி வருவதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில்நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை, விடுவிக்கக் கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை மியான்மர் ராணுவம் ‘இரும்புக் கரம்’ கொண்டு ஒடுக்கி வருகிறது.நேற்று போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் போலீசாரால் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 18 பேர் பலியானதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் யங்கூன்,தாவெய்,மற்றும் மாண்டலே போன்ற நகரங்களில் அதிக இறப்புக்கள் பதிவாகி உள்ளன என தெரிவித்துள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மாரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டம் மியான்மார் ராணுவத்துக்கு மிகப் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதனால் ராணுவம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகும் ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், உட்பட 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மியான்மரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.