அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் ஆல்பாஸ் செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம் மற்றும் சமதர்மம் உள்ளிட்ட போதனைகளை மக்களுக்கு போதித்த மனிதராக பிறந்து கடவுளாக வழங்கப்பட்டு வரும் அய்யா வைகுண்டரின் பிறந்தநாள் தென்தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.