Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வழிமறித்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்…. விரக்தியில் எடுத்த முடிவு…. தந்தை & மகன் கைது…!!

இளம்பெண்ணை வழிமறித்து இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் என்ற ஊரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் லேனா (25). இவர் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வழியில் எதிரே வந்த அதே ஊரை சேர்ந்த கந்தசாமி (28) என்பவர் லேனாவை நிறுத்தியுள்ளார். இதையடுத்து அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் லேனா சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

லேகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது கந்தசாமி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து லேனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு சில நாட்கள் கழித்து கந்தசாமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் லேனாவை திட்டி தவறாகப் பேசியதால் மனம் உடைந்த லேனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக கந்தசாமி மற்றும் அவருடைய தந்தை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |