Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரூ.250 கட்டணத்துடன் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்க்கு மட்டுமே போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இந்த கொடிய கொரோனா வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில காலத்திலேயே மருத்துவர்களின் முயற்சியால்  கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு இந்த தடுப்பூசி பல நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது . கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியாவில்  முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டு பிறகு முன் களப்பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. உடல்நிலை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் கட்டத்தில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை கொரோனா தடுப்பூசி அரசு மையங்களில் மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தனியார் மையங்களுக்கு இந்த  தடுப்பூசி வழங்கப்படாமல் இருந்த நிலையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனை மையங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மையங்கலில்  போடப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகான கட்டணம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 250 ரூபாய் வாங்க வேண்டும் எனவும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி அடுத்த 28 நாள் கழித்து தான் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மையங்களிலும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 250 ரூபாய் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சிறிய அளவில் தொகை மாறுபட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |