பிரிட்டன் சிறைக் கைதிகளுக்கு தாங்களே கஞ்சா தருவதாக குற்ற பதிவு ஆணையம் கூறிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள சிறையில் இருக்கும் கைதிகளை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமாக போதை பொருட்களை பயன்படுத்தி வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளை சமாளிப்பதற்கு தாங்களே கஞ்சா தருவதாக நார்த் வேல்ஸ் போலீஸ் மற்றும் குற்ற பதிவு ஆணையர் அர்பான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறைகளில் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். ஓபியாய்டு போன்ற மருந்துகள் கைதிகளுக்கு வழங்கப்படுவது மிகவும் கவலை தருகிறது. இந்த மருந்து கஞ்சாவை விட மிகவும் ஆபத்தானது. ஆகையால் தற்போது எடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் கைதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கஞ்சாவை வழங்குவோம். குற்றங்கள் குறைகிறதா என்று பார்க்கிறோம் என்று ஜோன்ஸ் கூறியுள்ளார். இவரின் இந்த முடிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.