லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் நிரவ் மோடியை இந்தியாவில் உள்ள சிறையில் அடைப்பதற்கு சிறப்பு அறை தயாராக உள்ளது.
குஜராத்தில் மிகப்பெரிய பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர் முறைகேடாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் அதனை காட்டி 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார். மேலும் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் கைது செய்ய ஏற்பாடு செய்யும் போது லண்டனுக்கு தப்பி ஓடினார். பிறகு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசு கேட்டுக் கொண்டதனால் லண்டனில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்குதல் செய்தது. அந்த மனுவை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்தியாவுக்கு நிரவ் மோடியை நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தது. எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்த உள்ள நிரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு ஒரு சிறப்பு அறை தயாராக இருப்பதாக கூறினார்கள்.
அவருக்கு வழங்கப்படும் சிறப்பு அறை பற்றி அதிகாரி கூறியது,” அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 12 ம் எண் வளாகத்தில் 3 சிறைகள் உள்ளதாகவும் அதில் ஒன்றில் நிரவ் மோடி அடைக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகாராஷ்டிரா சிறைதுறையிடம் மத்திய அரசு நிரவ் மோடிக்கு வழங்கப்படும் ஆர்தர் ரோடு சிறை வசதிகள் பற்றி கேட்டுள்ளது. அதைப் பற்றி மாநில அரசு கூறிய தகவலின் அடிப்படையில் நிரவ் மோடிக்கு 3 சதுர அடி மீட்டர் சுற்றளவில் சிறையில் இடம் ஒதுக்கபடுவதாகவும் படுக்கை விரிப்பு ,தலையணை ,போர்வை ஆகியவை இருப்பதாக கூறினார்கள் .
மேலும் சிறையில் தேவையான வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதி என அனைத்தும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையில் நிரவ் மோடிக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து 14 நாட்களுக்குள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இந்தியா இங்கிலாந்து இடையிலான ஒப்பந்தத்தின்படி குற்றவாளியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் உண்டு. அவரது முடிவு 2 மாதத்திற்குள் தெரியு”ம் என்று கூறியுள்ளனர்