Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள்… 5 பகுதிகள் முடக்கம்..!!

இத்தாலியில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் ஐந்து இடங்களில் முழுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது .

உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று இத்தாலியில் அதிகமாக பரவி வருவதால் இத்தாலியில்  உள்ள 20 பகுதிகளில் 5 இடங்களுக்கு சனிக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் இத்தாலியை  நான்கு அடுக்குகளாகப் பிரித்து பாதிப்புடைய தன்மையை கருத்தில் கொண்டு நான்கு வண்ணங்களாக அதனை அடையாளப் படுத்தி இருக்கின்றனர்.

ஜனவரி மாத கடைசியிலிருந்து இத்தாலியில் உள்ள பகுதியான பசிலிக்காடா  மற்றும் மோலிஸ் ஆகிய இரு இடங்களில் அதிகமாக கொரோனா பரவுவதால் சிவப்பு மண்டலத்திற்குள் வந்துள்ளது. அதனால் அவ்விடங்களில் இருக்கும் மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்றவை மூடப்படும் .மேலும் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற எல்லாம் கடைகளும் மூடப்படும் .அடுத்ததாக மத்திய கடலோர பகுதியான மார்ச்சே,பீட்மாண்ட்  மற்றும் லோம்பார்ட்டி ஆகிய 3 இடங்களில் முதலில் மஞ்சள் நிற மண்டலத்திலிருந்து தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது.

மொத்தமாக சொல்லப்போனால் இத்தாலியில் இருக்கும் 20 பகுதிகளில் சிகப்பு மண்டலத்தில் 2 பகுதிகளும், 9 இடங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் ,மஞ்சள் மண்டலத்தில் 8 பகுதிகளும் மற்றும் வெள்ளை மண்டலத்தில் 1 பகுதியும் கொண்டுவரப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.இத்தாலி நிர்வாகம் இந்த நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |