Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவன் வேறு பெண்களோடு தொடர்பு…. 2 குழந்தைகளை தவிக்க விட்டு…. தாய் எடுத்த முடிவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் அன்பரசன்- சித்ரா. இவர்கள் கடந்த 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் கோயம்புத்தூர் சென்று தொழில் நிமித்தமாக அங்கேயே குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சித்ரா தன்னுடைய கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதை அரசல்புரசலாக கேட்டு வைத்திருந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் 2 வது மகள் பிறந்தநாளுக்கு சித்தராவின் பெற்றோர் தங்க கொலுசு எடுத்து தருமாறு சித்ராவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த சித்ரா தன்னுடைய தாயிடம் செல்போனில் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடம் கோவிலுக்கு அனுப்பிவிட்டு வீட்டில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வந்த காவல்துறையினர் சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சித்ராவின் சடலத்தை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் சித்ராவின் பெற்றோர்கள் தங்களுடைய மகளின் இறப்புக்கு காரணமான அன்பரசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும், இதுவரை அன்பரசன் சித்ராவின் உடலை பார்க்க வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காவல்துறையினர் இது கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது 2 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தாய் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |