Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேளச்சேரி ஏரியை ஆய்வு செய்ய சென்ற தன்னார்வலர்கள் கைது….!!

சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு  இருக்கிறதா என்று அறப்போர் இயக்க  நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு  செய்ய சென்றனர். அப்போது  அங்கு வந்த போலீசார்  உரிய அனுமதியின்றி ஏரியை ஆய்வு செய்யக் கூடாது என்று 10 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். ஏரியை ஆய்வு செய்ய சென்றவர்களை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |