Categories
சினிமா தமிழ் சினிமா

புகைப்படத்தை வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன ‘மயக்கம் என்ன’ பட நடிகை… குவியும் வாழ்த்து…!!!

‘மயக்கம் என்ன’ பட நடிகை ரிச்சா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளப்  பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை ரிச்சா தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து இவர் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார் . இதன் பின் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரிச்சா படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இதையடுத்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இந்நிலையில் ரிச்சா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிற ஜூன் மாதம் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |