Categories
தேசிய செய்திகள்

“சிகிச்சை செய்ய பணமில்லை” வெறும் ரூ.10,000 பணத்துக்காக…. 46 வயது நபருக்கு 12வயது சிறுமியை…. திருமணம் செய்து வைத்த பரிதாபம்…!!

12 வயது மகளை ரூ.10,000 பணத்துக்காக 46 வயதுடையவருக்கு பெற்றோரை திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா(46). இவரது பக்கத்து வீட்டில் 12 வயது மற்றும் 16 வயதில் இரண்டு சிறுமிகள் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு திடீரென்று சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

மேலும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலைமை புரிந்து கொண்ட சுப்பையா அப்பெற்றோரிடம் சென்று உங்களது இளைய மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள், நான் ரூ.10,000 தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பின் வேறுவழியில்லாமல் அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த 12 வயது சிறுமியை சுப்பையாவிற்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் அச்சிறுமியை மீட்டு சுப்பையாவை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பையாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |