பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக உள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் நேரில் சென்று தனது விண்ணப்பத்தினை இணையதளம் பதிவு செய்ய முடியும். இன்றிலிருந்து மார்ச் 6ம் தேதி வரை இந்த விண்ணப்பத்தை பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தவறும்பட்சத்தில் மார்ச் 8 மற்றும் 9 தேதிகளில் சேவை மையத்திற்கு சென்று கூடுதலாக 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். தனித்தேர்வர்கள் தகுதி மற்றும் அறிவுரைகள் போன்றவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.